ஸ்விஸ் கன்டோனில் உள்ள குஸ்நாக்ட் மற்றும் Zug கன்டோனில் உள்ள ரிஷ்-ரோட்க்ரூஸ் இடையேயான A4 மோட்டார் பாதையில் ஒரு கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காரில் இருந்த இரண்டு பேர் மீட்கப்பட்டு பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சனிக்கிழமை பிற்பகல் 2:15 மணிக்குப் பின்னர் இந்த விபத்து நிகழ்ந்தது.
கார் வீதியின் வலது பக்கத்தை விட்டு விலகி ஒரு கொன்கிரீட் தடுப்பில் மோதி கவிழ்ந்துள்ளது.
78 வயதான ஓட்டுநரும் அவரது 84 வயது பயணியும் வாகனத்தில் சிக்கி பலத்த காயமடைந்தனர்.
மூலம்- bluewin