முட்டன்ஸ் அருகே A2 மோட்டார் பாதையில் நேற்று பிற்பகல் 12:45 மணியளவில் இரண்டு கார்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
பாசல் நோக்கிச் செல்லும் ஸ்வீசர்ஹால் சுரங்கப்பாதையின் நுழைவாயிலில் இரண்டு கார்கள் மோதிக்கொண்டன.
இரண்டு கார்களும் பக்கவாட்டில் மோதியதில், இரண்டு ஓட்டுநர்களும் காயமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்தை அடுத்து ஒரு கார் கவிழ்ந்துள்ளது.

