0.8 C
New York
Monday, December 29, 2025

ஆசிரியரை தீவிரவாதி என ஏசிய மாணவனின் தாய்க்கு தண்டனை.

பெர்ன் கன்டோனில்  தனது மகனின் ஆசிரியரை தீவிரவாதி என்று ஏசி, அவரது பொருட்களைத் தாக்கிச் சேதப்படுத்திய தாய் ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு கூட்டத்தில் அவர், ஆசிரியரை  “பன்றி” , “பயங்கரவாதி” என்று ஏசியுள்ளார். அத்துடன், தண்ணீரை எடுத்து ஆசிரியரை நோக்கி ஊற்றினார்.

தண்ணீர் ஆசிரியரின் மடிக்கணினியை சேதப்படுத்தியது. குற்றம்சாட்டப்பட்டவர் தனது செயல்களை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதையடுத்து, 51 வயதான துருக்கியப் பெண் சொத்து சேதம், அவமதிப்பு மற்றும் தாக்குதல் ஆகியவற்றில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் மீண்டும் குற்றம் செய்தால், அவர் தலா 30 பிராங்குகள் வீதம் 20 நாட்கள் அபராதம் செலுத்த வேண்டும்.

கூடுதலாக, அவர் மொத்தம் 350 பிராங்குகள் மற்றும் 500 பிராங்குகள் கட்டணமாக அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles