Baden இல் தப்பிச் சென்ற சிறைக்கைதியை தேடி பொலிசார் தொடர்ந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.
வியாழக்கிழமை வாகனம் ஒன்றில் ஏற்றும் போது, 23 வயதுடைய அல்பேனியரான சிறைக்கைதி கைவிலங்குடன் தப்பிச் சென்றார்.
அவரைக் கைது செய்ய மோப்ப நாய்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்த நிலையில் பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில், Lägern பிரதேசத்தில் சந்தேகத்துக்குரிய ஒருவர் பற்றி பாதசாரி ஒருவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்திருந்தார்.
அவை தப்பிச் சென்ற கைதியுடன் ஒத்திருந்தம நிலையில் சூரிச் Otelfingen பிரதேசத்தில் பாரிய தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
மோப்பநாய்கள் மற்றும் ஹெலிகொப்டர்களின் உதவியுடன் காட்டுப் பகுதியில் நேற்று இரவு வரை நடத்தப்பட்ட பாரிய தேடுதல்கள் தோல்வியில் முடிந்துள்ளன.
இன்று மூன்றாவது நாளாக பொலிசார் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
மூலம்- 20min.

