யாழ்ப்பாணம் – நாவாந்துறையில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த இளைஞன், கோல் கம்பம் சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 29 வயதுடைய யுவராஜ் செபஸ்தியாம்பிள்ளை என்ற கால்பந்தாட்ட வீரரே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த அவர், யாழ். போதனா மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணமாகியுள்ளார்.

