வடகிழக்கு சுவிட்சர்லாந்தின் விட்டன்பாக்கில் உள்ள துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சி தளம், நேற்று இரவு உடைக்கப்பட்டு, பழங்கால ஆயுதங்கள் திருடப்பட்டுள்ளன.
குற்றவாளிகள் ஒரு கதவு வழியாக கட்டிடத்திற்குள் நுழைந்ததாக சென். காலன் கன்டோனல் பொலிசார்தெரிவித்தனர்.
திருடப்பட்ட ஆயுதங்கள் ஒரு காட்சிப் பெட்டியில் இருந்தன.
எனினும் அங்கிருந்த ஒரு துப்பாக்கி கடையில் எந்த திருட்டும் இடம்பெறவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் சுவிஸ் இராணுவத்தின் துப்பாக்கிகள் காணாமல் போவதாக அறிக்கைகள் கூறுகின்றன.
2023 ஆம் ஆண்டில் 88 தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் 13 கைத்துப்பாக்கிகள் உட்பட 101 இராணுவ ஆயுதங்கள் காணாமல் போனதாகக் அறிவிக்கப்பட்டது.
மூலம்- swissinfo