16.5 C
New York
Wednesday, September 10, 2025

சூரிச்சில் கால்பந்தாட்டத்தில் பெண்களின் ஈடுபாடு அதிகரிப்பு

சூரிச்  கன்டோனில், 2023 ஒக்டோபர்  முதல், ஜூனியர் பெண்கள் கால்பந்தாட்ட அணிகளின் எண்ணிக்கை 43 சதவீதம் அதிகரித்துள்ளது.

தற்போது, கிட்டத்தட்ட 10,000 பெண்கள் கால்பந்து விளையாடுகிறார்கள். இதன் பின்னால்  உள்ள  பெண்களின் ஈடுபாடும் சீராக அதிகரித்து வருகிறது.

2023 உடன் ஒப்பிடும்போது, தற்போது, 30 சதவீதம் அதிகமான பெண் நடுவர்களும் 10 சதவீதம் அதிகமான பெண் அதிகாரிகளும் உள்ளனர்.

பெண்கள் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் மற்றும் பெண்கள் தேசிய அணியின் காலிறுதிப் போட்டி இந்த வளர்ச்சிக்கு கூடுதல் ஊக்கத்தை அளித்துள்ளது.

சூரிச் கன்டோனல் கவுன்சில் 2023 ஆம் ஆண்டில் கால்பந்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் நிலையான மேம்பாட்டிற்காக 1.5 மில்லியன் பிராங்கை ஒதுக்கியது.

கன்டோனல் விளையாட்டு அலுவலகம் பின்னர் சூரிச் பிராந்திய கால்பந்து சங்கம் (FVRZ) மற்றும் பிற கூட்டாளர்களுடன் இணைந்து நடவடிக்கைகளை உருவாக்கி செயல்படுத்தியது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles