லூசெர்ன் ஏரியில் நேற்றுக்காலை விழுந்த விமானத்தில் இருந்த இரண்டு பயணிகளும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக லூசெர்ன் காவல்துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானி அவசரமாக ஏரியில் விமானத்தை தரையிறக்க முயன்றுள்ளார் என அவர்கள் கருதுகின்றனர்.
78 வயதான ஒஸ்ரியரான விமானி இந்த விபத்தில் காயமடையவில்லை.
அதே நேரத்தில் பயணியான 55 வயர் சுவிஸ் பெண் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
ஏரியில் விழுந்த சிறிய விமானத்தைத் தேடும் பணி பிற்பகலிலும் தொடர்ந்து நடைபெற்றது.
மூலம்- swisinfo