16.6 C
New York
Wednesday, September 10, 2025

சுவிஸ் வங்கி கணக்கில் மோசடி- ஆங்கிலேய மாணவனுக்கு சிறைத்தண்டனை.

சுவிட்சர்லாந்தில்  நிதி மோசடியில் ஈடுபட்ட ஆங்கிலேயே மாணவன் ஒருவருக்கு லண்டனில் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த மாணவன் சுவிஸ் வங்கி வாடிக்கையாளர்களிடம் சுமார் 2.4 மில்லியன் பிராங்கை மோசடி செய்துள்ளார் என சுவிட்சர்லாந்தின் சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு முதல் இந்த  குற்றவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

தற்போது 21 வயதான அந்த ஆங்கிலேயர் சுவிஸ் வங்கிகளின் போலி மின்-வங்கி உள்நுழைவு பக்கங்களைப் பயன்படுத்தி, சுவிஸ் வாடிக்கையாளர்களின் அணுகல் தரவை இடைமறித்து அவர்களின் கணக்குகளை ஹக் செய்துள்ளார்.

பல்வேறு கன்டோன்களில் இருந்து 30 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன.

அந்த நபருக்கு எதிராக பிரிட்டிஷ் அதிகாரிகளால் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles