18.3 C
New York
Thursday, October 15, 2026

அமெரிக்க- சுவிஸ் பிரதிநிதிகள் ஜெனிவாவில் இரகசிய சந்திப்பு.

பொருளாதார பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்க பிரதிநிதிகளும் சுவிஸ் தேசிய கவுன்சில் உறுப்பினர்களும் இரகசிய சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.

சுவிட்சர்லாந்து-அமெரிக்க நாடாளுமன்ற சங்கத்தின் சுவிஸ் பிரதிநிதிகளும், பிரதிநிதிகள் சபையில் உள்ள சுவிஸ் நட்புக் குழுவான பிரெண்ட்ஸ் ஒவ் சுவிட்சர்லாந்து குழுவின் அமெரிக்க உறுப்பினர்களும் நேற்று ஜெனீவாவில் உள்ள ஐந்து நட்சத்திர இன்டர்கொண்டினென்டல் ஹோட்டலில் சந்தித்தனர்.

- Advertisement -

இருப்பினும், இரு குழுக்களும் கலந்துரையாடிய  விடயங்கள் குறித்து  தெளிவாகத் தெரியவில்லை.

நாடாளுமன்ற சங்கத்தின் தலைவரான தேசிய கவுன்சிலர் டேமியன் கோட்டியரிடம் இதுபற்றி கேட்டபோது எதுவும் கூறவில்லை.

இவருடன், தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் ஃபேபியன் மோலினா (SP/ZH), சைமன் மைக்கேல் (FDP/SO), மற்றும் லாரன்ட் வெஹ்ர்லி (FDP/VD) ஆகியோரும் சந்திப்பில் ஈடுபட்டனர்.

அவர்கள் எட்டு ஜனநாயகக் கட்சியினர் மற்றும் 20 குடியரசுக் கட்சியினர் உட்பட 28 காங்கிரஸ் உறுப்பினர்களை சந்தித்தனர்.

மூலம்- 20 min.

Related Articles

Latest Articles