12.9 C
New York
Monday, October 12, 2026

சிறார் பாலியல் குற்றச்சாட்டு- பாதிரியாருக்கு சிறைத்தண்டனை.

பாலியல் வன்கொடுமைகள் மற்றும் சிறார்களுடன் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக, ஒரு பாதிரியாரை லுகானோவில் உள்ள டிசினோ மாகாண குற்றவியல் நீதிமன்றம், குற்றவாளி எனக் கண்டறிந்துள்ளது.

அவருக்கு நிபந்தனையுடன் கூடிய 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன், சிறார்களுடன் தொடர்பு கொள்ளும் தொழில்முறை அல்லது தொழில்முறை அல்லாத நடவடிக்கைகளுக்கும் அவருக்கு நீதிமன்றம், வாழ்நாள் தடை விதித்துள்ளது.

56 வயதான அவர் வெளிநோயாளர் சிகிச்சையையும் மேற்கொள்ள வேண்டும்.

இரண்டு ஆண்டுகள் தகுதிகாண் காலம் கொண்ட, சிறைத்தண்டனை நிபந்தனைக்குட்பட்டது.

பாதிரியார் உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று தலைமை நீதிபதி விளக்கினார்.

அவர் கடந்த நவம்பரில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டார், அதற்கு முன்னர், மூன்று மாதங்கள் காவலில் இருந்தார்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles