-1.2 C
New York
Wednesday, December 31, 2025

பள்ளிப் பேருந்துடன் மோதிய 93 வயதுப் பாட்டி பலி.

கிளாரஸின் ஷ்வாண்டனில்  புதன்கிழமை காலை, இடம்பெற்ற விபத்தில் 93 வயதான பெண் ஓட்டுநர் ஒருவர், உயிரிழந்தார்.

அவர் எதிரே வந்த பாதையில் குறுக்கே சென்று, பள்ளிப் பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதாக கிளாரஸ் கன்டோனல் காவல்துறை தெரிவித்துள்ளது.

சமூக மையத்திற்குக் கீழே உள்ள பிரதான சாலையில் காலை 11 மணிக்குப் பின்னர் இந்த விபத்து நிகழ்ந்தது.

விபத்தை அடுத்து, பெண்ணின் கார் 180 டிகிரி சுழன்று சாலையின் வலது பக்கத்தில் நின்றது.

ஓட்டுநர் வாகனத்தில் சிக்கிக் கொண்டார். துணை மருத்துவர்கள்,பொலிசார் மற்றும் பிற மீட்புப் பணியாளர்கள் சிறிது நேரத்திற்குப் பிறகுதான் அவரை மீட்க  முடிந்தது.

மீட்புப் பணியின் போது, அவரது உடல்நிலை மோசமடைந்து,  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட , சிறிது நேரத்திலேயே  உயிரிழந்தார்.

பள்ளிப் பேருந்தின் ஓட்டுநர் காயமடையவில்லை. விபத்து நடந்த நேரத்தில் குழந்தைகள் யாரும் அதில் இல்லை.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles