சூரிச் விமான நிலையத்தின் தீர்வையற்ற கடைகளில் இருந்து பொருட்களை திருடிய இரண்டு பேரை சூரிச் பொலிசார் கைது செய்துள்ளனர்.
வியாழக்கிழமை காலை விமான நிலையத்திலிருந்து வெளியேறிய இரண்டு பேரை சூரிச் கன்டோனல் பொலிஸ் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அவர்களின் பொருட்களில் பல ஆயிரம் பிராங் மதிப்புள்ள வாசனை திரவியங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
சூரிச் விமான நிலையத்தின் தீர்வையற்ற கடைகளில் இருந்து அவர்கள் அதை திருடியது தெரியவந்துள்ளதாக சூரிச் கன்டோனல் பொலிஸ் தெரிவித்துள்ளது.
சந்தேகத்திற்குரிய திருடர்கள், லிதுவேனியாவைச் சேர்ந்த 20 வயது பெண் மற்றும் 29 வயதுடைய நபர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரிச் கன்டோனல் பொலிசாரின் விசாரணைகளில், அவர்கள் ஏற்கனவே சூரிச் விமான நிலையத்தில் உள்ள தீர்வையற்ற கடைகளில் இருந்து பல முறை வாசனை திரவியங்களைத் திருடியுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
அவர்களிடம் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுவிஸ் பிராங் பெறுமதியான திருடப்பட்ட பொருட்களின் ஒரு பகுதி மீட்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min.

