பெர்ன் கன்டோனில், குளிர்காலத்தில் பல்கனியில் நாய்க்குட்டியை பூட்டி வைத்த இளம் பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு பெண் வீட்டில் 1.5 மணி நேரம் யாரும் இல்லாததால், ஜனவரி மாதக் குளிர் காலத்தில், மூன்று மாத நாய்க்குட்டியை பல்கனியில் பூட்டி வைத்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
19 வயது பெண் சுமார் 1.5 மணி நேரம் கழித்து வீடு திரும்பும் வரை நாய்க்குட்டி அங்கேயே இருந்தது என்று பெர்ன் சட்டமா அதிபர் அலுவலகம் அதன் தண்டனை உத்தரவில் தெரிவித்துள்ளது.
நாய்க்குட்டி பல்கனியில் குரைத்துக் கொண்டிருந்ததால், பெர்ன் கன்டோனல் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
காவல்துறையினர், சிகரெட் துண்டுகள், பிளாஸ்டிக் பாகங்கள் மற்றும் பைகள் பல்கனியில் கிடந்ததைக் கண்டுபிடித்தனர், அவற்றை நாய்க்குட்டி விழுங்கி ஆபத்தில் சிக்கியிருக்கக்கூடும்.
பல்கனியில் தண்ணீர் கிண்ணமும் இல்லை. அடுக்குமாடி குடியிருப்பிலோ அல்லது பல்கனியிலோ நாய் படுக்க நாய் படுக்கை அல்லது அது போன்ற பொருத்தமான பொருள் எதுவும் இல்லை.
வாங்கிய 10 நாட்களுக்குள், அந்தப் பெண் நாயை மத்திய தரவுத்தளத்தில் பதிவு செய்யத் தவறிவிட்டார்.
விலங்கு நலச் சட்டம் மற்றும் விலங்கு நோய்கள் சட்டத்தை மீறியதற்காக 19 வயது பெண் இப்போது குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
அவர் 950 பிராங் அபராதமும், கூடுதலாக 300 பிராங் நடைமுறைக் கட்டணமும் செலுத்த வேண்டும்.
மூலம்- 20min.

