அமெரிக்காவின் 39% வரிகளால், சுவிட்சர்லாந்தில் ஒரு இலட்சம் வேலைகளை நேரடியாகப் பாதிக்கும் என வணிக குடை அமைப்பான economysuisse எச்சரித்துள்ளது.
முக்கியமாக கடிகாரத் தயாரிப்பு, இயந்திரங்கள், உலோகங்கள் மற்றும் உணவுத் தொழில்களில், இந்தப் பாதிப்பு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் வணிக கூட்டமைப்பைப் பொறுத்தவரை, “விளைவுகள் இன்னும் அதிகமாக இருக்கலாம், ஏனெனில் விநியோகஸ்தர்கள் மற்றும் சேவை வழங்குநர்களும் மறைமுகமாக பாதிக்கப்படுகிறார்கள்”.என்று தெரிவித்துள்ளது.
மருந்துகளுக்கு சுங்க வரிகள் விதிக்கப்பட்டால், மருந்துத் துறையில் பல வேலைகளும் பாதிக்கப்படும்” என்று economysuisse எச்சரித்துள்ளது.
குறிப்பாக, மின்னணு மற்றும் கடிகார தயாரிப்புத் துறைகளில் சுங்க வரிகளால் கிட்டத்தட்ட 20 ஆயிரம் வேலைகள் பாதிக்கப்படும்.
அதைத் தொடர்ந்து உணவு மற்றும் புகையிலை துறையில் கிட்டத்தட்ட 14 ஆயிரத்து 200 வேலைகள் மற்றும் மருந்துத் துறை சுமார் 13 ஆயிரத்து 900 வேலைகளும் பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மூலம்- swissinfo

