சூரிச்சில் உள்ள டீட்லிகான் அருகே உள்ள, A1 மோட்டார் பாதையில் ஒரு கடுமையான போக்குவரத்து விபத்து ஏற்பட்டது.
நேற்று இரவு 10:50 மணியளவில் வின்டர்தூர் நகர காவல்துறையின் ரோந்துப் பிரிவினர், ஒரு வாகனத்தை சோதனைக்காக நிறுத்த முயன்றனர்.
ஆனால், 19 வயது ஓட்டுநர் பொலிஸ் சோதனையைத் தவிர்க்க, நிறுத்தாமல் வேகமாக சூரிச் நோக்கி தப்பிச் சென்றுள்ளார்.
டீட்லிகான் அருகே முதலில் மற்றொரு காரில் மோதினார், சிறிது நேரத்திலேயே, தப்பியோடியவர் ஒரு விநியோக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதினார்.
இதில் 19 வயது இளைஞனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மூலம்- bluewin

