ஹெர்சோஜென்புச்சியில் உள்ள மிட்டல்ஹோல்ஸ் பாடசாலையில் வியாழக்கிழமை காலை, ஒரு மாணவன், கண்டபடி பலரைத் தாக்கியதால் பொலிசார் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
பாடசாலையில் ஒரு மாணவன் பொருட்களை வீசி மக்களைத் தாக்கினார்.
இதனால் பலருக்கு சிறிய காயம் ஏற்பட்டது, ஆனால் எந்த மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சொத்து சேதங்கள் ஏற்பட்டது.
பெர்ன் கன்டோனல் காவல்துறையின் ஆதரவுடன் பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளி சமூக சேவையாளர்களால், நிலைமை விரைவாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவருக்கு தொழில்முறை சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மதிய வேளைக்குப் பின்னர் திட்டமிட்டபடி வகுப்புகள் மீண்டும் ஆரம்பமாகின.
மூலம்- 20min.

