நியூசாடெல் ஏரியில் இருந்து பிடிக்கப்பட்ட கெளுத்தி மீன் சுவிட்சர்லாந்தில் இதுவரை பிடிக்கப்பட்ட கெளுத்தி மீன்களில் மிகநீளமானது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு தொழில்முறை மீனவர்கள் பெவைக்ஸ் அருகே உள்ள நீரில் இருந்து இந்த மீனைப் பிடித்துள்ளனர்.
இது 2.43 மீட்டர் நீளமும் 100.5 கிலோ கிராம் எடையும் கொண்டது.
இந்த மீன், ஒரு புதிய தேசிய சாதனையை படைக்கக் கூடும். இதுகுறித்து தற்போது அதிகாரப்பூர்வமாக பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
மீனவர்களில் ஒருவர் பிடிபட்ட கெளுத்தி மீனை சோர்வடையச் செய்ய 25 நிமிடங்கள் போராடியதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு அந்த மீனை சிறிய படகில் ஏற்றுவதற்கு பத்து நிமிடங்கள் ஆனது.
மூலம்- 20min