டிண்டிகோனில் உள்ள Coop Pronto பெட்ரோல் நிலையத்தில், முகமூடி அணிந்த ஒருவர் நேற்றிரவு 11 மணியளவில் கத்தியைக் காட்டி ஊழியர்களை அச்சுறுத்தி பணத்தைக் கொள்ளையடித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதையடுத்து தப்பிச் சென்ற அவரை, சிறிது நேரத்திலேயே ஆர்காவ் கன்டோனல் பொலிசார் கைது செய்துள்ளனர்.
23 வயதுடைய அந்த நபர், சுவிஸ் பிரஜை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- swissinfo