-4.8 C
New York
Sunday, December 28, 2025

ட்ரம்பின் நெருங்கிய சகா சுட்டுக்கொலை- அரைக் கம்பத்தில் அமெரிக்க கொடி.

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு நெருக்கமான தீவிர வலதுசாரி அரசியல் செயற்பாட்டாளரான சார்லி  கிர்க் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

Utah Valley பல்கலைக்கழகத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது 31 வயதான சார்லி கிர்க் சுடப்பட்டு படுகாயம் அடைந்தார்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சில மணிநேரங்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தை ட்ரம்ப் கண்டித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை அமெரிக்காவில் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு உத்தரவிட்டுள்ளதாக ட்ரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டை அடுத்து காவல்துறையினர் ஒரு சந்தேக நபரைக் கைது செய்திருந்தனர்.

விசாரணையின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக எவ்பிஐ இயக்குநர் உறுதிப்படுத்தியுள்ளார்.

குற்றவாளியை தேடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles