பெர்னில் உள்ள லிஸ்ஸில் வேலைத் தள விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சனிக்கிழமை மதியம் 12 மணியளவில், கிர்ச்சென்ஃபெல்ட்ஸ்ட்ராஸில் பதிவாகியுள்ளது.
பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர், இன்னும் தெளிவாகத் தெரியாத காரணங்களால், அகழ்வுப் பணியின் போது களிமண் குழியில் விழுந்து புதையுண்டார்.
லிஸ் தீயணைப்புத் துறை மற்றும் மூன்றாம் தரப்பினரின் உடனடி மீட்பு முயற்சிகள் இருந்தபோதிலும், அந்த நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது அடையாளங்கள் இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை.
மூலம்- 20min

