சூரிச் மாவட்டம் 3 இல் ஒரு கார் அம்புலன்ஸ் மீது மோதிய விபத்தில், பலர் காயம் அடைந்தனர்.
நேற்று அதிகாலை 12:30 மணிக்கு சற்று முன்னர், அம்புலன்ஸ் கால்க்பிரைடெஸ்ட்ராஸ் வழியாக சீபாஹன்ஸ்ட்ராஸ் நோக்கி அவசர விளக்குகளை எரியவிட்டுச் சென்று கொண்டிருந்தது.
ஏம்ட்லர்ஸ்ட்ராஸ் சந்திப்பில், அது ஒரு கார் மீது மோதியது.
விபத்திற்கான சரியான சூழ்நிலைகள் இன்னமும் தெளிவாக இல்லை. அதுபற்றி தொடர்ந்து விசாரணை இடம்பெறுகிறது.
காரில் இருந்த இருவரும், அம்புலன்ஸ் குழுவினரும் சூரிச் பாதுகாப்பு மற்றும் மீட்பு துணை மருத்துவர்களால் சிறிய காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மோதலின் போது விபத்தில் சிக்கிய அம்புலன்ஸ் எந்த நோயாளிகளையும் ஏற்றிச் செல்லவில்லை.
மூலம்- 20min

