நேற்றுப் பிற்பகல், லொஸ் ஏஞ்சல்ஸிலிருந்து சூரிச் வந்த LX41 விமானம், குளோட்டன் விமான நிலையத்தில் தரையிறங்கிக் கொண்டிருந்த போது, மீண்டும் மேல் எழுந்ததால், பயணிகளும், விமான நிலையத்தில் இருந்த பார்வையாளர்களும் குழப்பம் அடைந்தனர்.
இதுகுறித்து விமானத்தில் இருந்த 23 வயதான அந்த விமானி பயணி ஒருவர் தகவல் வெளியிடுகையில்,
“நாங்கள் தரைக்கு மிக அருகில் இருந்தோம் – திடீரென்று ஜன்னலுக்கு வெளியே பார்த்த போது, நாங்கள் மீண்டும் மேலே செல்வதைக் கண்டேன்,எல்லோரும் குழப்பத்தில் ஒருவரையொருவர் பார்த்தார்கள்.
சிறிது நேரத்திற்குப் பின்னர், அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் ஒரு அறிவிப்பு வந்தது.
எங்களுக்கு முன்னால் இருந்த விமானம் மிகவும் மெதுவாக தரையிறங்கியதால், நாங்கள் சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது என்று விமானி இறுதியாக விளக்கினார் என்று அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவிலிருந்து வந்த விமானம், பின்னர் அந்தப் பகுதியைச் சுற்றி வந்து இறுதியாக பத்து நிமிடங்களுக்குப் பிறகு சூரிச்சை அடைந்தது.
Flightradar24 இன் தரவுகளின்படி, விமானம் LX41 தரையிறங்குவதற்கு சற்று முன்பு வின்டர்தர் மற்றும் ஷாஃப்ஹவுசன் மண்டலத்தின் சில பகுதிகள் மீது மற்றொரு முறை வட்டம் அடித்த பின்னர், சூரிச் விமான நிலையத்தில் சரியான நேரத்தில் தரையிறங்கியது.
சுவிஸ் நிறுவனத்தின் ஊடக பேச்சாளர் மைக்கேல் பெல்சர், முந்தைய விமானத்தால் ஓடுபாதை சீர்படுத்தப்படவில்லை. இதனால் LX41 விமானம், ஒரு முறை வட்டமடித்த பின்னர் இறங்கியது. இது விமானிகள் தொடர்ந்து பயிற்சி செய்யும் ஒரு “நிலையான முறை என்று கூறினார்.
எனினும் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறங்கினர்.
மூலம்- 20min

