சுவிட்சர்லாந்தின் Vaud கன்டோனில் உள்ள Moudonஇல் அண்மையில் பல எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கட்டுமானப் பணிக்காக தோண்டிய போது, சுமார் பத்து மீட்டர் பரப்பளவில் பல எலும்புக்கூடுகள் கிடந்தன.
இதையடுத்து, கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. எலும்புகளை மீட்டெடுக்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வியாழக்கிழமை சம்பவ இடத்திற்கு வந்தனர்.
1806 மற்றும் 1842 க்கு இடையில் அது கல்லறையாக இருந்த பகுதி என, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2023 இல் நகர மையத்தில் மேலும் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கண்டுபிடிப்புகள் காரணமாக ஓரளவு தாமதமான இந்த திட்டம், இப்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்காணிக்கப்படுகிறது.
“குறிப்பாக மேலும் எச்சங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பகுதிகளில், நாங்கள் குறிப்பிட்ட கவனத்துடன் செயல்படுகிறோம்,” என்று நகராட்சி தெரிவித்துள்ளது.
மூலம்- 20min

