5.2 C
New York
Sunday, October 18, 2026

கண்காட்சியில் பங்கேற்ற கடல் விமானம் ஏரிக்குள் விழுந்தது- பெண் பலி.

கடல் விமானம் ஒன்று  சாம் அருகே ஜுக் ஏரியில் விழுந்து விபத்திற்குள்ளானதில், 60 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்றுப் பிற்பகல் 1:45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

விமான கண்காட்சியின் போது இந்த விபத்து நிகழ்ந்ததாக ஜுக் நகரில் உள்ள குற்றவியல் வழக்கு விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பேர் அந்த விமானத்தில் இருந்தனர்.  

49 வயதான விமானி, காயமின்றி, விமானத்திலிருந்து தானாக பாதுகாப்பாக வெளியேறினார்.

கடல் விமானம் கரையிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் சுமார் 10 மீட்டர் ஆழத்தில் மூழ்கியது.

காணாமல் போன 60 வயது பெண், சுழியோடிகளால் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.

இந்த விபத்தை அடுத்து, விமான கண்காட்சி தடைப்பட்டுள்ளது.

பத்து மீட்டர் ஆழத்தில் இருந்து விமானம் தூக்கி கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles