காசா உதவி கப்பல் அணியில் இருந்த கடைசி பத்து சுவிஸ் நாட்டவர்களும், இன்று இஸ்ரேலில் இருந்து ஜோர்டானுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அம்மானில் உள்ள சுவிஸ் தூதரகம் அவர்களை எல்லையில் வரவேற்று, அவர்களுக்கான தங்குமிடம் மற்றும் சுவிட்சர்லாந்திற்கான பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது.
ஆர்வலர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர் என்று சுவிஸ் வெளியுறவு அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
அவர்களில் ஜெனீவாவின் முன்னாள் மேயர் ரெமி பகானியும் அடங்குவர்.
முன்னதாக காசாவிற்கான உதவிகளுடன் சென்ற ஒன்பது சுவிஸ் நாட்டவர்கள், விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட பின்னர், கடந்த வார இறுதியில் சுவிட்சர்லாந்துக்குத் திரும்பினர்.
மூலம்- swissinfo

