நேஃபெல்ஸில் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில், 19 வயது இளைஞரை கிளாரஸ் கன்டோனல் பொலிசார் கைது செய்துள்ளனர்.
அந்த நபர் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆப்கானிஸ்தான் குடியிருப்பாளர் என்றும், அவர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படுவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் கடந்த 13ஆம் திகதி 2025 திங்கட்கிழமை இரவு 9 மணியளவில், நேஃபெல்ஸில் உள்ள லின்த் பிரிட்ஜ் தெற்கு பகுதியில் நடந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர் கிளாரஸிலிருந்து நேஃபெல்ஸ்-மோலிஸுக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார், அங்கு குற்றம் சாட்டப்பட்டவர் அவரை அணுகினார். அவர்கள் இருவரும் நிலையத்தில் இறங்கினர்.
அந்த நபர் அந்தப் பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளார்.
அது முடியாத போது, நெஸ்டல் இயந்திர தொழிற்சாலைக்கு அருகிலுள்ள லிந்த் அணையில் உள்ள ஒரு புல்வெளியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
குற்றவியல் புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
பாதிக்கப்பட்டவரைப் பாதுகாப்பதற்காகவும், விசாரணை காரணங்களுக்காகவும், தற்போது கூடுதல் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
மூலம்- bluewin

