ஜெனீவா கன்டோன் இடைத்தேர்தலில் பசுமைக் கட்சி வேட்பாளர் நிக்கோலஸ் வோல்டர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது சுற்று அஞ்சல் வாக்குகளில் அவர் SVP வேட்பாளரை விட 4,558 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார்.
ஜெனீவா அரச அதிபர் அலுவலகத்தின் தற்காலிக முடிவுகளின்படி, 59 வயதான தேசிய கவுன்சிலர் வோல்டர் 42,749 வாக்குகளைப் பெற்றார். SVP வேட்பாளர், 44 வயதான ஜெனீவா கிராண்ட் கவுன்சிலரும் வைன் தயாரிப்பாளருமான லியோனல் டுகெர்டில், முதற்கட்ட முடிவுகளின்படி 38,191 வாக்குகளைப் பெற்றார்.
தீவிர இடதுசாரிக் கட்சியான “Le Peuple d’Abord” இன் பிலிப் ஓபர்சன் 5,278 வாக்குகளைப் பெற்றார்.
மே மாதம், 49 வயதான அரச கவுன்சிலர் ஹோட்ஜர்ஸ், பன்னிரண்டு ஆண்டுகள் பதவியில் இருந்த பிறகு, பதவி விலகுவதாக அறிவித்தார்.
ஜெனீவா கன்டோனில் பதிவான மொத்த வாக்குகளில் சுமார் 95 சதவீதம் அஞ்சல் வாக்குகளாகும்.
மூலம்- bluewin

