சுவிஸ் கூட்டாட்சி காவல் அலுவலகத்தில் (பெட்போல்) பயங்கரவாதம் தொடர்பான பத்து விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாக அதன் இயக்குனர் ஈவா வைல்டி-கோர்டெஸ் தெரிவித்தார்.
சுவிட்சர்லாந்தில் ஒரு தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது, எங்களிடம் சுமார் பத்து பயங்கரவாதம் தொடர்பான விசாரணைகள் உள்ளன. அவை ஜிஹாதி பிரச்சாரம் அல்லது பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பது தொடர்பானவை, என்று வைல்டி-கோர்டெஸ் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வசந்த காலத்தில் முறியடிக்கப்பட்டதாகக் கூறப்படும் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக நடந்து வரும் விசாரணை குறித்து அவர் மேலும் எந்த விவரங்களையும் வழங்கவில்லை.
18 வயதான சுவிஸ் தீவிரவாதி என்று கூறப்படும் குற்றவாளி காவலில் வைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.
சிறார்களை இணையத்தில் தீவிரமயமாக்குவது மிகப்பெரிய கவலைகளில் ஒன்றாகும். அதன் வளர்ச்சி “மிகவும் கவலையளிக்கிறது” என்று அவர் கூறினார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.
சுவிட்சர்லாந்தில் குற்றவியல் அமைப்புகளின் எண்ணிக்கை மிகப் பெரியது என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் பதவியேற்ற வைல்டி-கோர்டெஸ் கூறினார்.
மூலம்- swissinfo

