ஹேகென்டார்ஃப் (சோலோதர்ன்) அருகே A2 மோட்டார் பாதையில் நேற்று ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.
சோலோதர்ன் காவல்துறையின் தகவல்களின்படி காலை 8 மணிக்கு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பாசல் நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு காரில் மோதியது.
விபத்தின் போது, ஓட்டுநர் வெளியே தூக்கி எறியப்பட்டார், கார் மத்திய தடையை உடைத்து எதிரே வந்த பாதையில் மற்றொரு காருடன் மோதியது.
இந்த விபத்தின் போது பறந்த சிதைவுகளால் மேலும் இரண்டு வாகனங்கள் சேதமடைந்தன.
மொத்தம் ஐந்து கார்கள் விபத்தில் சிக்கின. எனினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த விபத்து காலை நேரங்களில் பாசல் மற்றும் லூசெர்ன் நோக்கி இரு திசைகளிலும் போக்குவரத்து இடையூறுகளை ஏற்படுத்தியது.
நண்பகலில் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பியது.
மூலம்- bluewin

