“டைம் அவுட்” என்ற பயண இதழ் ஐரோப்பா முழுவதும் உள்ள மிக அழகான பத்து கிறிஸ்துமஸ் சந்தைகளைத் தேர்ந்தெடுத்துள்ளது.
இந்தப் பட்டியலில் சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் கிறிஸ்துமஸ் சந்தை எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
முதலிடத்தில் ஜெர்மனியின் நூரம்பெர்க்கும், இரண்டாமிடத்தில் இங்கிலாந்தின் மான்செஸ்டரும், மூன்றாமிடத்தில் பிரான்சின் பாரிசும், நான்காமிடத்தில் ஹங்கேரியின் புடாபெஸ்டும், ஐந்தாமிடத்தில், ஒஸ்ரியாவின் வியன்னாவும், ஆறாமிடத்தில் லிதுவேனியாவின் Vilnius உம், ஏழாமிடத்தில் இங்கிலாந்தின் லண்டனும், எட்டாமிடத்தில் சுவிட்சர்லாந்தின் லூசெர்னும், ஒன்பதாமிடத்தில் எஸ்தோனியாவின் Tallinnஉம், பத்தாமிடத்தில் டென்மார்க்கின் கொப்பன்ஹேகனும் இடம்பிடித்துள்ளன.
மூலம்- bluewin

