0.8 C
New York
Monday, December 29, 2025

பல குழந்தைகளை கொலை செய்த ஆயுள் தண்டனைக் கைதி சிறையில் மரணம்.

பல குழந்தைகளைக் கொலை செய்த குற்றவாளியான வெர்னர் ஃபெராரி வெள்ளிக்கிழமை காலை லென்ஸ்பர்க் சீர்திருத்த மையத்தில் மரணமடைந்துள்ளார்.

சுவிசைச் சேர்ந்த அந்த நபர் இறக்கும் போது 78 வயதாகும். சிறிது காலமாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார்.

ஃபெராரி 1995 முதல் லென்ஸ்பர்க் சீர்திருத்த மையத்தில் இஆயுள் தண்டனையை அனுபவித்து வந்தார்.

ஆராவ் கன்டோனல் மருத்துவமனையில் உள்ள தடயவியல் மருத்துவ நிறுவனம் அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது.

ஃபெராரி பல குழந்தை கொலைகளைச் செய்த குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் 1971 ஓகஸ்ட் மாதம் பாசல் பகுதியில் முதல் கொலையைச் செய்தார். அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆறு ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பின்னர், 1979 ஓகஸ்ட்டில் விடுவிக்கப்பட்டார்.

அவர் 1989 இல் ஓல்டனில் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட பின்னர், 1980 மற்றும் 1989 க்கு இடையில் சுவிட்சர்லாந்தை பயமுறுத்திய தொடர் குழந்தை கொலைகள் முடிவுக்கு வந்தன.

ஃபெராரிக்கு 1995 இல் ஐந்து குழந்தை கொலைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பள்ளி மாணவி ரூத் ஸ்டெய்ன்மேனைக் கொலை செய்ததற்காகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

  • ஸ்டீன்மேன் மே 1980 இல் ஆர்காவ் மாகாணத்தின் வுரென்லோஸ் அருகே உள்ள ஒரு காட்டுப் பகுதியில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
  • 1989 இல் கைது செய்யப்பட்ட பின்னர் ஃபெராரி ஐந்து கொலைகளில் நான்கை ஒப்புக்கொண்டார், ஆனால் ரூத் ஸ்டெய்ன்மேனைக் கொன்றதை எப்போதும் மறுத்து வந்தார்.

சாட்சி வாக்குமூலங்கள் மற்றும் புதிய ஆதாரங்களின் அடிப்படையில், ஆர்காவ் உயர் நீதிமன்றம் 2003 இல் ஃபெராரியின் மேல்முறையீட்டை அங்கீகரித்து, கொலைக் குற்றத்தை மறுபரிசீலனை செய்ய முதல் முறையாக உத்தரவிட்டது.

2007 ஏப்ரலில, ஸ்டெய்ன்மேனின் கொலையில் ஃபெராரி குற்றவாளி அல்ல என்று பேடன் மாவட்ட நீதிமன்றம் கண்டறிந்தது. இந்த வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டார். இருப்பினும், மற்ற நான்கு வழக்குகளுக்காக அவர் சிறையில் இருந்தார்.

Related Articles

Latest Articles