அமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்திடம் இருந்து, முதலில் வாங்கத் திட்டமிட்ட 36 F-35 போர் விமானங்களை விட குறைவான போர் விமானங்களையே வாங்குவதென சுவிஸ் அரசாங்கம் நேற்று முடிவு செய்துள்ளது.
எத்தனை விமானங்கள் வாங்கப்படும் என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.
அதிகபட்ச எண்ணிக்கையான F-35 போர் விமானங்களை சுவிட்சர்லாந்து கொள்முதல் செய்யும் என்று அரசாங்கம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
வாக்காளர்களால் அங்கீகரிக்கப்பட்ட 6 பில்லியன் பிராங் நிதி கட்டமைப்பிற்குள் இந்த கொள்முதல் இருக்க வேண்டும். எனவே அரசாங்கம் கூடுதல் கடன் வழங்குவதை நிராகரித்துள்ளது. மக்களின் விருப்பம் மதிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
36 போர் விமானங்களை வாங்குவதற்கான திட்டமிடப்பட்டதை விட, 1.3 பில்லியன் பிராங் வரை கூடுதல் செலவுகள் ஏற்படும் என்பதால், நிதி காரணங்களுக்காக அமெரிக்காவால் முதலில் திட்டமிடப்பட்டது போல 36 F-35 விமானங்களை வாங்க முடியவில்லைஎன்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மூலம்-swissinfo

