பெக்ஸில் கட்டுமானம் நடைபெறும் இடத்தில் நடந்த விபத்தில் 15 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதாக வௌட் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை, காலை 9 மணியளவில், ஒரு கட்டுமான தளத்தில் பணியின் போது, மின் உயர்த்தி உடைந்ததினால், 15 வயது பயிற்சியாளர் கூரை ஓடுகள் ஏற்றப்பட்ட பலகையின் கீழ் அகப்பட்டார். லொறியில் இருந்து ஓடுகளை இறக்கிக் கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
அந்தச் சிறுவன் விபத்து நடந்த இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம்- 20min

