2026 ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில் டிசம்பர் 31 ஆம் திகதி ஜெனீவா நகரம் ஏரிக்கரை விருந்தை ஏற்பாடு செய்கிறது.
குவாய் குஸ்டாவ்-அடோர் இசை, கரோக்கி, உணவு லொறிகள் மற்றும் வானவேடிக்கைகளுடன் இந்த விருந்து இடம்பெறவுள்ளது.
இந்த புத்தாண்டு தினத்தின் கருப்பொருள் “Ensemble on brille!” (ஒன்றாக நாம் பிரகாசிக்கிறோம்!) என்பதாகும்
இங்கு இரண்டு பெரிய பார்கள் மற்றும் சுமார் 15 உணவு கடைகள் இரவு 8 மணி முதல் திறந்திருக்கும்.
கலை நிகழ்ச்சி இரவு 9 மணிக்கு தொடங்கி ஜனவரி 1 ஆம் திகதி அதிகாலை 2 மணி வரை நீடிக்கும்.
மூன்று டிஜே மேடைகளும் தனித்துவமான இசையை வழங்கும்.
நள்ளிரவில், துறைமுகம் சதுக்கத்தில் உள்ள ஒரு பெரிய ஹோட்டலின் ஏற்பாட்டில் வானவேடிக்கைகள் இடம்பெறும். பின்னர் புத்தாண்டைக் கொண்டாடும் எண்பதுகளின் பாணி நடனமும் இடம்பெறும்.
இந்த நிகழ்விற்காக குவாய் குஸ்டாவ்-அடோர் போக்குவரத்துக்கு முற்றிலுமாக மூடப்படும். மோன்ட்-பிளாங்க் பாலம், குவாய் டு மோன்ட்-பிளாங்க் மற்றும் குவாய் வில்சன் ஆகியவை இரவு 10 மணி முதல் அதிகாலை 1 மணி வரை மூடப்படும்.
மூலம்-swissinfo

