சுவிட்சர்லாந்தில் டெஸ்லா கார் மோதியதில் பொலிஸ் வாகனம் சேதம் அடைந்துள்ளது.
58 வயதுடைய நபர் ஒருவர் ஓட்டிச் சென்ற டெஸ்லா கார் நின்று கொண்டிருந்த பொலிஸ் வாகனத்தின் மீது மோதியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, ஆனால் பொலிஸ் வாகனம் பலத்த சேதம் அடைந்துள்ளது.
நேற்று காலை 6 மணிக்கு சற்று முன்பு வடகிழக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள A1 நெடுஞ்சாலையின் முன்ச்விலன் வெளியேறும் இடத்திற்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்ததாக துர்காவ் மாகாண பொலிஸ் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் 100,000 பிராங்க்கும் அதிகமாகும். விபத்துக்கான சரியான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
மூலம்- swissinfo

