லோகார்னோவில் உள்ள வியா ரினால்டோ சிமெனில் இன்று காலை 5:30 மணியளவில் ஒரு பெட்ரோல் நிலையத்தில் கொள்ளை இடம்பெற்றதாக டிசினோ கன்டோனல் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
ஒரு நபர் பெண் விற்பனையாளரை மிரட்டி, அவரது கைகளையும் கால்களையும் டக்ட் டேப்பால் கட்டிப் போட்டு விட்டு, பணத்தை திருடிக் கொண்டு கால்நடையாக தப்பிச் சென்றார்.
இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
உடனடியாக தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது, இதில் கன்டோனல் பொலிஸ் அதிகாரிகள், லோகார்னோ நகர பொலிஸ், ஃபெடரல் சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு அலுவலகம் (BZGS) மற்றும் போக்குவரத்து பொலிசாரும் பங்கெடுத்தனர்.
எனினும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை.
மூலம்- 20min

