10.7 C
New York
Friday, May 15, 2026

உயிரிழந்த ஐந்து பேரின் உடல்கள் இத்தாலிக்கு அனுப்பி வைப்பு.

கிரான்ஸ்-மொன்டானாவில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்த ஆறு இத்தாலியர்களில் ஐந்து பேரின் உடல்கள் இத்தாலிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

உடல்களை ஏற்றிய இத்தாலிய விமானப்படை விமானம் திங்கட்கிழமை நண்பகலில் சியோன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.

C130 விமானம் நான்கு சவப்பெட்டிகளை மிலனிலும் , ஐந்தாவது சவப்பெட்டியை ரோமில் இறக்கியுள்ளது.

இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி மற்றும் விளையாட்டு அமைச்சர் ஆண்ட்ரா அபோடி ஆகியோர் உடல்களை பொறுப்பேற்றனர்.

உயிரிழந்தவர்களில் மூன்று பேரின் குடும்பத்தினரும் விமானத்தில் இருந்ததாக இத்தாலிய பத்திரிகை நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீ விபத்தில் உயிரிழந்த 40 பேரில் 15 முதல் 16 வயதுக்குட்பட்ட ஆறு இத்தாலியர்கள் அடங்குவர் என்று வாலாய்ஸ் மாகாண அதிகாரிகள் இந்த வார இறுதியில் வெளியிட்ட இறப்பு எண்ணிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதினொரு இத்தாலியர்களும் காயமடைந்தனர்.

அதேவேளை, புதன்கிழமை அனைத்து இத்தாலிய பள்ளிகளிலும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும் என கல்வி அமைச்சர் கியூசெப் வால்டிடாரா அறிவித்துள்ளார்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles