-0.9 C
New York
Saturday, February 7, 2026

பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடன் தொடர்பு- WEF தலைமை நிர்வாகி குறித்து சுயாதீன விசாரணை.

உலக பொருளாதார மன்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரி போர்ஜ் பிரெண்டே மீது சுயாதீன விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக உலக பொருளாதார மன்றம் அறிவித்துள்ளது.

பிரெண்டே பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததாகத் தெரிந்த நிலையில்,, அவருடனான அவரது உறவை தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

எப்ஸ்டீனுடன்பிரெண்டே, மூன்று இரவு உணவுகளில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி தொடர்பும் இருந்தது.

இது தொடர்பாக விசாரணையை நடத்துவதற்கான முடிவு, வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை காட்டுவதாக உலக பொருளாதார மன்றம் (WEF) ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, தலைமை நிர்வாக அதிகாரியாக பிரெண்டே இதற்கு ஒத்துழைத்து வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரெண்டே வணிகக் கூட்டங்களில் எப்ஸ்டீனைக் கண்டதாகவும், . எப்ஸ்டீனின் கடந்த காலத்தையும் குற்றச் செயல்களையும் பற்றி அவருக்குத் தெரியாது என்றும், அவரது பின்னணியை இன்னும் முழுமையாகச் சரிபார்த்திருக்கலாம் என்றும், அவ்வாறு செய்யாததற்கு வருத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles