36.1 C
New York
Saturday, July 4, 2026

ஜெனிவாவில் இருந்து ஐ.நாவை மாற்ற வேண்டும்- புதிய பிரச்சினையை கிளப்பும் அமெரிக்கா.

​​நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதுவர், மிகவும் விலையுயர்ந்த நகரங்களில் ஐ.நா.வின் இருப்பை மறுசீரமைக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு சபையைய ஜெனிவாவிற்கு மாற்ற வேண்டும் என்ற பெருகிவரும் கோரிக்கைகளுக்கு மத்தியில், ஜெனிவாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க தூதுவர் மைக் வோல்ட்ஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஐ.நா பொதுச் சபையின் கடந்த உயர் மட்டக் கூட்டத்தில் சில தலைவர்களுக்கு விசா மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, நியூயோர்க்கில் இருந்து ஜெனிவாவிற்கு பாதுகாப்பு சபை மற்றும் ஐ.நா. பொதுச் சபையை மாற்றுகின்ற பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டும் என்று தலைவர்கள் பலர் முன்மொழிகின்றனர்.

ஆனால், அனைவரும் பேசக்கூடிய ஒரு இடம் எப்போதும் நியூயார்க்காகவே இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நம்புகிறார் என்று வோல்ட்ஸ் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸைப் பொறுத்தவரை, விசா கொள்கையில் எந்த மாற்றங்களையும் அவர் உறுதியளிக்கவில்லை.

ஜெனிவா ஏற்கனவே டசின் கணக்கான ஐ.நா. நிறுவனங்களை நடத்துகிறது என்றும் அவர் கூறினார்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles