20.2 C
New York
Monday, June 22, 2026

கட்டாய தடுப்பூசிகளுக்கு எதிராக பேரணி- கண்ணீர் புகை குண்டு வீச்சு.

கட்டாய தடுப்பூசிகளுக்கு எதிராக சென் காலனில் நேற்று நூற்றுக்கணக்கானோர் பேரணி நடத்தினர். மாஸ்-வோல் இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், தீவிர வலதுசாரி சுவிஸ் குழுவான ஜங்கே டாட்டின் உறுப்பினர்களால் வழிநடத்தப்பட்டது.

பேரணி ரயில் நிலையத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்னர், நண்பகலுக்குப் பினனர் ஒரு குழப்பம் ஏற்பட்டது.

“ஓஸ்ட்ஸ்வீஸ் நாஜிஃப்ரே” குழு, நிகழ்வுக்கு முன்னதாக அங்கீகரிக்கப்படாத எதிர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததாக சென் காலன் நகர பொலிசார் தெரிவித்தனர்.

600 ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் பதாதைகளை ஏந்திச் சென்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக, பொலிஸ் இறுதியில் அந்த இடத்தில் மாஸ்-வோல் ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதியை திரும்பப் பெற்றது.

பின்னர் போராட்டக்காரர்கள் பொலிஸ் சுற்றிவளைப்பைத் தாண்டிச் சென்று பழைய நகரம் வழியாக அணிவகுத்துச் சென்றனர்.

வழியில் மோதல்கள் வெடித்தன, மேலும் போட்டி குழுக்களுக்கு இடையே மோதல்களைத் தடுக்க பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

Related Articles

Latest Articles