புடாபெஸ்டுக்குச் சென்ற சுவிஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சூரிச் திரும்பியுள்ளது.
சூரிச் விமான நிலையத்திலிருந்து நேற்று மாலை 5:44 மணிக்கு புடாபெஸ்டுக்குச் புறப்பட்ட சுவிஸ் விமானம் LX2258 ஜெர்மனியின் எல்லையைத் தாண்டியதும், திரும்பி மாலை 6:55 மணிக்கு சூரிச்சில் மீண்டும் தரையிறங்கியது.
பிரேக்குகளின் ஒரு பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினையே சுவிட்சர்லாந்துக்குத் திரும்புவதற்கான காரணம் என சுவிஸ் விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் சில்வியா எக்ஸர்-குன் தெரிவித்துள்ளார்.
சூரிச்சில் தரையிறக்கம் சீராக இருந்தது. விமானங்களில் மேலதிக பிரேக்கிங் அமைப்புகள் இருப்பதால், பயணிகளின் பாதுகாப்பு எல்லா நேரங்களிலும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்- 20min

