ராட்சத ஈட்டி அல்லி என்று அழைக்கப்படும், டோரியாந்தஸ் பால்மெரி, நடப்பட்டு 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெனீவா தாவரவியல் பூங்காவின் பசுமைக்குடில்களில் பூத்துள்ளது.
அவுஸ்ரேலியாவைத் தாயகமாகக் கொண்ட இந்த ராட்சத அல்லி, தன் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே பூக்கும்.
இந்த விதை 1983-ஆம் ஆண்டில் நடப்பட்டது.
“இந்தத் தாவரம் கண்ணாடிக்குக் கீழ், தொட்டிகளில் வளர்க்கப்படுகிறது,” என்று பசுமைக்குடில்களுக்குப் பொறுப்பான தோட்டக்காரர் வின்சென்ட் கோல்ட்ஸ்மிட், கூறினார்.
“இந்த 43 ஆண்டுகள், பல தலைமுறை தோட்டக்காரர்களின் தொடர்ச்சியான உழைப்பைப் பிரதிபலிக்கின்றன,” என்று அவர் மேலும் கூறினார்.
நீர்ப்பாசனம், காலநிலை மற்றும் அடிமண் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் காட்டப்படும் அக்கறையை கோல்ட்ஷ்மிட் சுட்டிக்காட்டுகிறார். “இயற்கை விவசாயச் சூழலில் இது இன்னும் அதிக சவாலான ஒரு விஷயமாகும்,” என்று அவர் கூறினார்.
டோரியந்தஸ் பால்மெரி ஒரு மோனோகார்பிக் தாவரம் ஆகும், அதாவது அது தன் வாழ்நாளில் ஒருமுறை பூத்துவிட்டுப் பின்னர் இறந்துவிடும். அதன் பிரகாசமான சிவப்புப் பூத்தண்டு, வாடுவதற்கு முன்பு மூன்று முதல் ஐந்து வாரங்கள் வரை வளரும்.
எனவே, இந்த மலர் வானவேடிக்கையைக் கண்டு ரசிக்க ஜெனீவா தாவரவியல் பூங்காவிற்கு வருவதற்கு அதிக காலம் காத்திருக்க வேண்டாம்.
மூலம்- swissinfo

