30.1 C
New York
Wednesday, August 12, 2026

உக்ரேனிய ஜனாதிபதியுடன் சுவிஸ் ஜனாதிபதி சந்திப்பு.

சுவிஸ் ஜனாதிபதி கை பார்மெலின் திங்கட்கிழமை மாலை, ஜெனீவா விமான நிலையத்தில் உக்ரேனிய சகா வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை இருதரப்பு சந்திப்பிற்காக வரவேற்றார்.

கீவ் மற்றும் மொஸ்கோ இடையேயான மோதலில் சுவிட்சர்லாந்தின் நல்லெண்ண முயற்சிகள், உக்ரேனின் புனரமைப்பு மற்றும் அந்நாட்டுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஆகியவை சந்திப்பின் நிகழ்ச்சி நிரலில் இருந்தன.

இரவு 10 மணிக்குச் சற்றுப் பிறகு ஜெலென்ஸ்கியை வரவேற்ற சுவிஸ் ஜனாதிபதி, “ஜனவரியில் நடந்த டாவோஸ் மாநாட்டிற்குப் பிறகு உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறினார். பின்னர், அவரது பயணம் நன்றாக இருந்ததா என்று கேட்டார், அதற்கு ஜெலென்ஸ்கி ஆம் என்று பதிலளித்தார்.

சுவிஸ் தரப்பில், வெளியுறவு அமைச்சின் சர்வதேசப் பாதுகாப்பு விவகாரங்களின் தலைவர் கேப்ரியல் லூச்சிங்கர் உடனிருந்தார். “கேப்ரியல், நாம் ஒருவரையொருவர் அறிவோம்,” என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

உக்ரேனிய அதிபருடன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா மற்றும் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் ரௌஸ்டெம் உமரோவ் ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.

Related Articles

Latest Articles