4.8 C
New York
Monday, December 29, 2025

புயலுடன் கனமழை- டிசினோவில் பேரழிவு, 3 பேர் பலி.

டிசினோ கன்டோனில் கடும் புயலுடன் கூடிய மழையினால், பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளதுடன், 3 பேர் உயிரிழந்தனர்.

மோசமான வானிலை காரணமாக செவியோவில் உள்ள விஸ்லெட்டோ பாலம் இன்று அதிகாலை இடிந்து விழுந்தது.

போன்டானா பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில், இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். சடலங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக டிசினோ கன்டோன் பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்தவர்கள், ஜெர்மன் மொழி பேசும் சுவிஸ் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, வலசில் காணாமல் போன ஒருவரும் விடுதி ஒன்றினுள் சடலமாக மீட்கப்பட்டதாகவும் பொலிசார். அறிவித்துள்ளனர்.

வல் லவிசாராவில் காணாமல்போன மற்றுமொருவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சிவியோ, வல் ரொவானா, வல் பொவோனா,  வல் லவிசாரா ஆகிய இடங்களில் குடிநீர் மாசுபட்டுள்ளதாகவும், குழாய் நீரை இனி குடிக்கவோ, சமைக்கவோ அல்லது கழுவவோ பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தண்ணீரை கொதிக்க வைத்து பயன்படுத்துமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கடும் மழை வெள்ளத்தினால் வலஸ், செமாட் உள்ளிட்ட பல இடங்களில் வெள்ளம் தேங்கியிருப்பதுடன், ரயில் மற்றும் வீதிப் போக்குவரத்துகளும தடைப்பட்டுள்ளன.

பல இடங்களில் கார்கள் வாகனங்களையும் வெள்ளம் அடித்துச் சென்றுள்ளது.

நூற்றுக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மீட்பு பணியில் இராணுவத்தினரும் பங்கேற்றுள்ளனர். உலங்குவானூர்திகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணிநேரத்தில் சதுர மீற்றர் ஒன்றில் 200 லீற்றர் மழை கொட்டியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம் மூலம் – 20min

Related Articles

Latest Articles