19.1 C
New York
Friday, June 20, 2025

சார் நகர மேயர் தேர்தலில் 18 வாக்குகளால் மெயூலி வெற்றி- நாளை மறுவாக்கு எண்ணிக்கை.

சுவிசின் சார் ( Chur) நகரின் புதிய மேயராக FDP கட்சியின் ஹான்ஸ் மார்டின் மெயூலி 18 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட SP கட்சியின் பட்ரிக் டெகியாகோமி 18 வாக்குகளால் தோல்வியடைந்த நிலையில், மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

ஜூன் 9 ஆம் திகதி நடந்த முதல் சுற்று வாக்கெடுப்புக்குப் பிறகு, பட்ரிக் டெகியாகோமி 3,356 வாக்குகளுடன் மெய்லியை விட கிட்டத்தட்ட ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் இருந்தார்.

எனினும், டெகியாகோமி இரண்டாவது வாக்கெடுப்பில் 4,309 வாக்குகளைப் பெற்ற நிலையில், , மெயூலி 4,327 வாக்குகளைப் பெற்றார்.

வாக்கு வித்தியாசம் 0.3 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதால், நாளை  திங்கட்கிழமை அதிகாரப்பூர்வ மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படவுள்ளது.

Related Articles

Latest Articles