மோசமான வானிலை அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், சூரிச்சில் சமஷ்டி ஆடைத் திருவிழா எந்தத் தடையும் இன்றி சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
கடந்த வெள்ளியன்று ஆரம்பமாக 3 நாள் பாரம்பரிய ஆடைத் திருவிழா, நேற்று மதியம் மூன்று மணிநேரம் நீடித்த அணிவகுப்புடன் முடிவுக்கு வந்தது.
இந்தப் பாரிய அணிவகுப்பில் சுவிட்சர்லாந்து முழுவதிலுமிருந்து 54 குழுக்களும், ஏழு வெளிநாட்டு அமைப்புகளும் பங்கேற்றன.
இந்த அணிவகுப்பில் 4,500 பேர் பங்கேற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பாரம்பரிய உடைகளில்,காட்சியளித்தனர்.
ஜனாதிபதி வயோலா அம்ஹெர்ட் சூரிச்சில் நேற்று நடந்த ஆடை திருவிழாவில் கலந்து கொண்டிருந்தார்.
இந்த 3 நாள் ஆடைத் திருவிழாவில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
வானிலை அச்சுறுத்தல்கள் இருந்த போதும், இந்த விழா எந்த பாதிப்பும் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது.