டிசினோ மற்றும் வலஸ் பகுதிகளில் சனிக்கிழமை கடும் புயல் மற்றும் மழையினால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில், சிக்கி குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர்.
மூன்று பேர் மாகியா பள்ளத்தாக்கிலும், ஒருவர் சாஸ்-கிரண்டிலும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இநத வெள்ளத்தினல் வீதிகள், வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
டிசினோ கன்டோனல் பொலிஸ், திங்கட்கிழமை இரவு மக்களை தங்கள் வீடுகளில் தங்குமாறு அறிவித்துள்ளது.
மக்கள் வானொலியைக் கேட்க வேண்டும் என்றும், எந்த அறிவிப்புகளையும் கவனிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குடிநீரூக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் பல இடங்களில் மின் விநியோகங்களும் தடைப்பட்டுள்ளன. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வலஸ் கன்டோன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு இராணுவத்தின் உதவியைக் கோரியுள்ளது.