ரொட்குரோயிட்சில் (Rotkreuz) இன்று காலை நடந்த மர்மமான ஒரு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
16 வயதுடைய அர்ஜன் என்ற மாணவன், இன்று காலை லூகானோவிற்கு செல்லும் ரயிலுக்காக ரொட்குரோயிட்ஸ்சில் உள்ள ரயில் நிலையத்தில் காத்திருந்த போது, மிகப் பிரகாசமான ஒரு ஒளி பரவி மறைந்தது.
காலை 9:45 மணியளவில் ரயில் நிலையத்திற்கு அருகில் இந்தப் பிரகாசமான ஒளியைத் தொடர்ந்து ஒரு இடிபோன்ற சத்தமும் கேட்டதாக அர்ஜன் கூறினார்.
வெடிப்பு ஏற்பட்டதாக நினைக்கிறேன் என்றும், அது ஒரு நம்பமுடியாத பிரகாசமான மற்றும் வெள்ளை ஒளி, என்றும் அவர் குறிப்பிட்டார்.
காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் பிராங் கிளீனர், “இது ஒரு வெடிப்பு அல்ல என்றும், மின்சாரம் தாக்கியதால் விபத்து ஏற்பட்டதாகவும், அதில் ஒருவர் காயமடைந்தார்,” என்றும் தெரிவித்துள்ளார்.
மேலதிக விபரங்கள் எதனையும் பொலிசார் இதுவரை வெளியிடவில்லை.