சூரிச் ஏரியைக் கடக்கும் நீச்சல் போட்டி, ஜூலை 10 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
வரும் புதன்கிழமை தண்ணீரின் வெப்பநிலை மிகவும் குறைவாக இருக்கும் என்பதாலும், மழை பெய்யக் கூடிய வானிலை காணப்படுவதாகவும், இது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.
தற்போதைய நீரின் வெப்பநிலை மிகவும் குறைவாக உள்ளதாகவும், வானிலை காரணமாக அடுத்த இரண்டு நாட்களில் குறைந்தபட்சம் 21 டிகிரிக்கு வெப்பநிலை உயரும் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
ஜூலை 10ஆம் திகதி ஏரி கடக்கும் நீச்சல் போட்டிக்கான நுழைவுச்சீட்டு முன்கூட்டியே விற்கப்படாது.
ஜூலை 8ம் திகதி திங்கட்கிழமை மதியம் 12 மணி முதல் நுழைவுச்சீட்டுகள் கிடைக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
9ஆயிரம் பேர் வரை பங்கேற்கும் இந்த ஏரி கடக்கும் போட்டியை நடத்துவதற்கு ஏரியின் நடுப்பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியசாக இருக்க வேண்டும்.
எனவே, குறித்த வெப்பநிலையை அவதானித்து 10ஆம் திகதி போட்டி நடத்தப்படுமா என்பது 8ஆம் திகதியே தீர்மானிக்கப்படவுள்ளது.